/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர் புகார் பெட்டி ;பச்சைவர்ணம்பெருமாள் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?திருவள்ளூர் புகார் பெட்டி ;பச்சைவர்ணம்பெருமாள் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர் புகார் பெட்டி ;பச்சைவர்ணம்பெருமாள் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர் புகார் பெட்டி ;பச்சைவர்ணம்பெருமாள் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர் புகார் பெட்டி ;பச்சைவர்ணம்பெருமாள் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 20, 2024 01:02 AM

பச்சைவர்ணம்பெருமாள் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
திருமழிசை அடுத்துள்ளது பூந்த மல்லி ஒன்றியத்துக்குட்பட்ட அகரம் மேல் ஊராட்சி. இங்குள்ள பச்சைவர்ணம் பெருமாள் கோவில் அருகே கோவில் குளம் உள்ளது.
இந்த குளத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை குளத்தில் சேகரமாகி உள்ளது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்டஅதிகாரிகள் பச்சைவர்ணம்பெருமாள் கோவில் குளத்தைசீரமைத்து குப்பை, கழிவுநீர்கலப்பதை தடுத்து நிறுத்தி சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.
- கே. பூபாலன், திருமழிசை.
சாலையோரம்குப்பை எரிப்பு
திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே பாலம் அருகே சிலர் குப்பைகள் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல், குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர்.
அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகையால், துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். பலமுறை வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் குப்பைகள் கொளுத்துவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். பாண்டு, மத்துார்.
சிப்காட் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுமா?
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள சாலைகள் ஓரம் மழைநீர் கால்வாய் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், அந்த கால்வாய்களில் புதர்கள் மண்டி, கோரை புற்கள் வளர்ந்துள்ளன. அடுத்தடுத்து மழை காலம் வர இருப்பதால், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், சிப்காட் சாலையோர கால்வாய்களை சுத்தம் செய்ய கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன்,கும்மிடிப்பூண்டி