/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மந்தகதியில் திருத்தணி புதிய பேருந்து நிலைய பணிமந்தகதியில் திருத்தணி புதிய பேருந்து நிலைய பணி
மந்தகதியில் திருத்தணி புதிய பேருந்து நிலைய பணி
மந்தகதியில் திருத்தணி புதிய பேருந்து நிலைய பணி
மந்தகதியில் திருத்தணி புதிய பேருந்து நிலைய பணி
ADDED : பிப் 10, 2024 08:48 PM

திருத்தணி:திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் மற்றும் ம.பொ.சி.சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தடுக்கும் வகையில், அரசு போக்குவரத்து பணிமனை அருகே கடந்த 2022ம் ஆண்டு, அமைச்சர் நேரு, 12.74 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
புதிய பேருந்து நிலைய பணிகள் கடந்தாண்டு வரை துரித வேகத்தில் நடந்து வந்தது. தற்போது, கடந்த ஒன்றரை மாதமாக பேருந்து நிலைய பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் புதிய நவீன பேருந்து நிலைய கட்டடப்பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு காலதாமதம் ஆகிறது.
இதனால் திருத்தணியில் தற்போதைய பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய பேருந்து நிலையத்தில் கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, பேருந்து நிலையத்தில் தரைத்தளம் பேருந்துகள் வந்து செல்வதற்கு தேவையான சாலைகள் அமைப்பதற்கு மண்கொட்டி சமம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
'இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்து சாலைகள் அமைத்து வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பேருந்து நிலைய பணிகள் முழுமையாக நிறைவடையும்' என்றார்.