/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம் சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம்
சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம்
சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம்
சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம்
ADDED : ஜூன் 07, 2025 10:52 PM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த, புதுகீச்சலத்தைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், 45. நேற்று, இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நாராயணபுரம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முனிகிருஷ்ணன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெகன்நாதன் மற்றும் வரலட்சுமி ஆகியோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.