ADDED : ஜூன் 02, 2025 11:18 PM
திருத்தணி, :திருத்தணி அடுத்த சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாந்தி, 48, கமலக்கண்ணன், 45, சங்கர், 59.
இவர்கள் மூவரும், நேற்று காலை விவசாய பணிக்காக, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் கரும்பு தோட்டத்திற்கு வந்தனர்.
அங்கு மூவரும், கரும்பு பயிருக்கு பூச்சி மருந்து தெளிப்பு மற்றும் உரம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கரும்பு பயிரில் மறைந்திருந்த மலை தேனீக்கள் திடீரென மூன்று பேரையும் தலை, முகம் போன்ற பகுதிகளில் கடித்தது.
பின், பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.