ADDED : செப் 06, 2025 11:38 PM
பொதட்டூர்பேட்டை:முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதி கொண்டதில், இரு இளைஞர்கள் காயமடைந்தனர். மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர்கள் பாலமுருகன், 23, ஜோதிலிங்கம், 25. இருவரும், நேற்று முன்தினம் மாலை காந்திநகர் துணைமின் நிலையம் அருகே நடந்து சென்ற போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், ஜோதிலிங்கம் மற்றும் பாலமுருகனை தாக்கியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், தொட்டிகண்டிகையைச் சேர்ந்த தேவா, 19, புண்ணி, 21, கிஷோர், 22, ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில், இருதரப்பு இளைஞர்களுக்கும், ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.