/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பக்தோசித பெருமாளுக்கு 15ம் தேதி திருக்கல்யாணம்பக்தோசித பெருமாளுக்கு 15ம் தேதி திருக்கல்யாணம்
பக்தோசித பெருமாளுக்கு 15ம் தேதி திருக்கல்யாணம்
பக்தோசித பெருமாளுக்கு 15ம் தேதி திருக்கல்யாணம்
பக்தோசித பெருமாளுக்கு 15ம் தேதி திருக்கல்யாணம்
ADDED : ஜன 12, 2024 09:50 PM
சோளிங்கர்:சோளிங்கர் நகரில் அருள்பாலிக்கும் பக்தோசித பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி மகரசங்கராந்தி பொங்கல் திருநாளில், கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.
மறுநாள் 16ம் தேதி சோளிங்கரின் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பரிவேட்டை புறப்படுகிறார். அதிகாலை 5:00 மணிக்கு புறப்பாடு ஆகும் பெருமாள், கோபாலபுரம், நாகபூண்டி, மரிகுப்பம், வீரமங்கலம் பல்வேறு கிராமங்களில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
திரும்பும் வழியில், வட ஸ்ரீரங்கம் எனப்படும் அஸ்வரேவந்தாபுரம், திருக்காவேரி குளக்கரையில் உள்ள மண்டகப்படியில் அருள்பாலிக்கிறார். 17 ம்தேதி, கொண்டபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பரிவேட்டை புறப்படுகிறார்.