/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்
ADDED : மே 29, 2025 07:55 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து மூலருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. வரும், 2ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 5ம் தேதி அர்ஜூனன் தபசு, 8ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது.
தொடர்ந்து, 9ம் தேதி காலையில் தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. தீமிதி விழா ஒட்டி தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகா பாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.