ADDED : மார் 27, 2025 08:37 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார், 25. இவர் கனகம்மாசத்திரம் அடுத்த புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 18ம் தேதி வேலைக்கு சென்றவர் பின் வீடுதிரும்பவில்லை.
வேலை செய்யும் இடம், உறவினர்கள், நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அஜித்குமாரின் தந்தை சரவணன் அளித்த புகாரின்படி கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.