பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோணசமுத்திரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் தேசப்பன், 42.
இவர் ஆவடி அடுத்த திருநின்றவூரில் வேலை பார்த்து வருகிறார். டிச., 2ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி அலமேலு, பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்துஉள்ளார்.