ADDED : செப் 18, 2025 11:37 PM
கடம்பத்துார்:போக்குவரத்திற்கு இடையூறு செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை 4:00 மணியளவில் ரோந்து பணி மேற் கொண்டனர்.
அப் போது புதுமாவிலங்கை - வேப்பஞ்செட்டி செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 23 என்பதும் இவர் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் லோகேஷை கைது செய்தனர்.