/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆகாயத் தாமரையால் மாயமாகும் கோவில் குளம் ஆகாயத் தாமரையால் மாயமாகும் கோவில் குளம்
ஆகாயத் தாமரையால் மாயமாகும் கோவில் குளம்
ஆகாயத் தாமரையால் மாயமாகும் கோவில் குளம்
ஆகாயத் தாமரையால் மாயமாகும் கோவில் குளம்
ADDED : ஜூன் 16, 2025 02:01 AM

ஆரணி:சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவாபுரியில், செல்லியம்மன் கோவில் உள்ளது. அதனருகே பரந்து விரிந்த கோவில் குளம் உள்ளது.
சாலையோரம் திறந்தவெளியில் குளம் இருப்பதால், கழிவுகள் தாராளமாக குவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அப்பகுதியில் உள்ள உணவக கழிவுகளும், கழிவுநீரும் குளத்தில் திறந்து விடப்படுகிறது. சின்னம்பேடு ஊராட்சி நிர்வாகம் குளத்தை முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தின் நீர் அசுத்தம் அடைந்து, குளம் முழுதும் ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன.
ஓராண்டுக்கு முன் வரை மக்களின் பயன்பாட்டில் இருந்த குளம், தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே, சோழவரம் ஒன்றிய நிர்வாகம் உடனடியாக ஆகாயத் தாமரைகளை அகற்றி, குளத்திற்கும் சாலைக்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும்.
குளத்தை சுத்தம் செய்த பின், முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.