/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குப்பை தொட்டியாக மாறிய குளம் வீரமங்கலத்தில் தொடரும் அவலம் குப்பை தொட்டியாக மாறிய குளம் வீரமங்கலத்தில் தொடரும் அவலம்
குப்பை தொட்டியாக மாறிய குளம் வீரமங்கலத்தில் தொடரும் அவலம்
குப்பை தொட்டியாக மாறிய குளம் வீரமங்கலத்தில் தொடரும் அவலம்
குப்பை தொட்டியாக மாறிய குளம் வீரமங்கலத்தில் தொடரும் அவலம்
ADDED : ஜூன் 06, 2025 02:32 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்கலம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி வளாகத்தின் நடுவே கிராம பொதுகுளம் அமைந்துள்ளது. பள்ளி வளாகத்தில் இருக்கும் இந்த குளத்திற்கு, 2014ல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டதும், குளத்தின் பராமரிப்பு கைவிடப்பட்டது.
பராமரிப்பு கைவிடப்பட்ட நிலையில், குளத்தின் சுற்றுச்சுவரும் இடிந்து விழ துவங்கியது. நீர்வரத்தும் தடைபட்டது. இதனால், சுற்றுச்சுவர் எழுப்பும் வரை வற்றாத நீர்வளத்துடன் இருந்த குளம், அதன்பின் வறண்டு சீரழிய துவங்கியது.
குளத்தில் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக, பகுதிவாசிகள் குளத்தில் குப்பை கொட்ட துவங்கினர். இந்த குப்பையையும் அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குளக்கரையை ஒட்டி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்றல் சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, குளத்தை துார்வாரி சீரமைக்கவும், வரத்து கால்வாய்களை புனரமைத்து, சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.