ADDED : பிப் 24, 2024 01:22 AM
திருத்தணி:திருத்தணி நகரில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் திருத்தணி கமலா தியேட்டர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் வெங்கடேசன், 51, என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து, 116 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.