ADDED : ஜன 11, 2024 12:47 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் இருளர் காலனியில் வசித்து வருபவர் மங்கா, 48. இவரது மகன் நாகராஜ், 26.
கடந்த 8ம் தேதி நாகராஜ் வீட்டில் இருந்தபோது, முன்விரோதம் காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் வீட்டில் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியால் நாகராஜை வெட்டினார்.
இதனால், தலையில் பலத்த காயமடைந்த நாகராஜ், சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது தாய் மங்கா, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து, கன்னியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.