Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆற்றில் இறுதி ஊர்வலம் 8 ஆண்டாக தொடரும் அவலம்

ஆற்றில் இறுதி ஊர்வலம் 8 ஆண்டாக தொடரும் அவலம்

ஆற்றில் இறுதி ஊர்வலம் 8 ஆண்டாக தொடரும் அவலம்

ஆற்றில் இறுதி ஊர்வலம் 8 ஆண்டாக தொடரும் அவலம்

ADDED : ஜன 24, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பொம்மராஜிபுரம் கிராமத்தில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், நந்தியாறு அருகே உள்ள இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கு, நந்தியாற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய நிர்வாகம் நந்தியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்தது.

இந்நிலையில், 2015ம் ஆண்டு நந்தியாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. பாலத்தை சீரமைக்காமல் ஒன்றிய நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது.

இதனால், எட்டு ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை, நந்தியாற்றில் இறங்கி தான் சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

நேற்று முன்தினம், கன்னியப்பன், 70, என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் உடலை நேற்று சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் போது, நந்தியாற்றில் செல்லும் தண்ணீரில் இறங்கி, ஆபத்தான முறையில் கொண்டு சென்றனர்.

பொம்மராஜிபுரம் பகுதியினர், பல ஆண்டுகளாக சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பலமுறை ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us