/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாயமாகி வரும் பொது குளம் மழைநீர் சேமிப்பதில் சிக்கல் மாயமாகி வரும் பொது குளம் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்
மாயமாகி வரும் பொது குளம் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்
மாயமாகி வரும் பொது குளம் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்
மாயமாகி வரும் பொது குளம் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்
ADDED : ஜூன் 25, 2025 03:14 AM

பொன்னேரி:கோரை புற்கள் வளர்ந்து, பராமரிப்பு இன்றி உள்ள பொதுக் குளம் சீரமைக்கப்படாததால், மழைநீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், ஆலையம்மன் நகரில் உள்ள பொதுக் குளம், பராமரிப்பு இன்றி உள்ளது. மேலும், குளம் முழுதும் கோரை புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், மெதுார் பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது. அவ்வப்போது, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இங்குள்ள குளம் பல ஆண்டுகளாக துார்வாரி பராமரிக்கப்படாததால், குளத்தில் மழைநீர் தேங்குவதில்லை.
தேங்கினாலும், அதை பயன்படுத்த முடியாத அளவிற்கு செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை பராமரித்தால் கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, பருவ மழைக்கு முன் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.