/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சவுடு மண் எடுப்பதில் பிரச்னை கலெக்டர் அலுவலகம் முற்றுகைசவுடு மண் எடுப்பதில் பிரச்னை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சவுடு மண் எடுப்பதில் பிரச்னை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சவுடு மண் எடுப்பதில் பிரச்னை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சவுடு மண் எடுப்பதில் பிரச்னை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 23, 2024 10:40 PM
திருவள்ளூர்,:கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது விடையூர் கிராமம். கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த ஊரில், 2,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த கிராமத்தில், சித்தேரி, பெரிய ஏரி என இரண்டு ஏரிகள், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை துார் வாரி, சவுடு மண் எடுக்க, தனி நபர் ஒருவருக்கு, 60 நாட்கள் அனுமதி அளித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமவாசிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 'சித்தேரி, பெரிய ஏரிகளில், 2 அடி வரை மணல் உள்ளது.
சவுடு மண் குவாரி செயல்பட்டால், மணலும் கொள்ளை போகும். இதனால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஏரிகளில் சவுடு மண் குவாரி செயல்படுத்த அனுமதிக்க வேண்டாம்' என மனு அளித்தனர்.
இந்நிலையில், நேற்று விடையூர் ஊராட்சி தலைவர் ஏழுமலை, தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி தலைமையில், 120 பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, 'விடையூர் கிராம ஏரிகளை துார்வாரி சீர்படுத்தும் வகையில், சவுடு மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும், என மனு அளித்தனர்.