ADDED : ஜன 29, 2024 06:56 AM
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், தங்கானுாரில், இரண்டு நாட்களாக நடைபெற்ற
வெற்றுக்கால் சேவல்சண்டை போட்டியில், 3,000 சேவல்கள் பங்கேற்றன. இதில், 1,500 சேவல்கள் வெற்றி பெற்றன. 1,000 சேவல்கள் சமநிலை பெற்றன.
புதுச்சேரி சேர்ந்த சின்னத்தம்பியின், 40 சேவல்கள் போட்டியில் பங்கேற்றதில், 18 சேவல்கள் வெற்றி பெற்று முதல் பரிசு வென்றது. கடலுார் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின், 25 சேவல்கள் பங்கேற்றதில் 12 சேவல்கள் வெற்றி பெற்று, இரண்டாம் இடம் பிடித்தது. சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஜாகீரின் 23 சேவல்களில் 11 சேவல்கள் வெற்றி பெற்று மூன்றாவது பரிசு பெற்றது.