/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கால்பந்தாட்ட பயிற்சி முகாம் பங்கேற்ற சிறுவர்களுக்கு சான்றுகால்பந்தாட்ட பயிற்சி முகாம் பங்கேற்ற சிறுவர்களுக்கு சான்று
கால்பந்தாட்ட பயிற்சி முகாம் பங்கேற்ற சிறுவர்களுக்கு சான்று
கால்பந்தாட்ட பயிற்சி முகாம் பங்கேற்ற சிறுவர்களுக்கு சான்று
கால்பந்தாட்ட பயிற்சி முகாம் பங்கேற்ற சிறுவர்களுக்கு சான்று
ADDED : ஜூன் 02, 2025 11:27 PM

பொன்னேரி :பொன்னேரி அடுத்த அக்கரம்பேடு கிராமத்தில், ஏ.எப்.சி., கால்பந்தாட்ட குழு சார்பில், சிறுவர்களுக்கான இலவச கோடைக்கால கால்பந்தாட்ட பயிற்சி, கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் அனுப்பம்பட்டு, தேவதானம், அக்கரம்பேடு, மேட்டுப்பாளையம், பொன்னேரி பகுதிகளில் இருந்து, 13 -17 வயதிற்கு உட்பட்ட, 65 சிறுவர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியாளர்கள் ஜேபஸ், அஜித்குமார், விக்னேஷ், பிரேம்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின்போது, போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலை, பயிற்சி பெற்ற சிறுவர்களுக்குள் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.