/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பள்ளி எதிரே தடுப்பு மாணவர்கள் நிம்மதி அரசு பள்ளி எதிரே தடுப்பு மாணவர்கள் நிம்மதி
அரசு பள்ளி எதிரே தடுப்பு மாணவர்கள் நிம்மதி
அரசு பள்ளி எதிரே தடுப்பு மாணவர்கள் நிம்மதி
அரசு பள்ளி எதிரே தடுப்பு மாணவர்கள் நிம்மதி
ADDED : மே 30, 2025 01:59 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அஸ்வரேவந்தாபுரத்தில், சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில், 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சாலை வழியாக ஆந்திர மாநிலம், சித்துார் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருத்தணி மற்றும் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.
வாகன போக்குவரத்து நெரிசலால் சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போது அந்த பகுதியில் சாலை மைய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதே மார்க்கத்தில் செயல்படும் ஆர்.கே.பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி எதிரேயும் சாலை மைய தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.