/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காதல் தகராறில் மாணவி கொலை; பேச மறுத்ததால் வாலிபர் வெறி காதல் தகராறில் மாணவி கொலை; பேச மறுத்ததால் வாலிபர் வெறி
காதல் தகராறில் மாணவி கொலை; பேச மறுத்ததால் வாலிபர் வெறி
காதல் தகராறில் மாணவி கொலை; பேச மறுத்ததால் வாலிபர் வெறி
காதல் தகராறில் மாணவி கொலை; பேச மறுத்ததால் வாலிபர் வெறி
ADDED : மே 29, 2025 12:54 AM

சோளிங்கர் : திருவள்ளூர் மாவட்டம், கே.ஜி., கண்டிகையை சேர்ந்தவர் கார்பென்டர் ஜெகத்குமார், 46. இவரது மகள் ஜனனி, 16, பத்தாம் வகுப்பு முடித்த இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த புலிவலத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்க இருந்தார்.
தற்போது, விடுமுறை என்பதால், ஜெகத்குமாரின் சகோதரி மகள்கள் லக்ஷயா, 16, சரண்யா, 14, ஜனனி ஆகிய மூவரும் பாட்டி வீட்டில் இருந்தனர்.
நேற்று மாலை, திடீரென வீட்டிற்குள் வந்த வாலிபர் ஒருவர், அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழிட்டு, ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஜனனியை கத்தியால் சரமாரியாக குத்திய அவர், தடுக்க முயன்ற லக்ஷயாவையும் வெட்டியுள்ளார். அலறல் கேட்டு வந்த பாட்டி உள்ளிட்டோர், கதவை உடைத்து இருவரையும் மீட்டனர். ஜனனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லக்ஷயா வேலுார் அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார்.
தப்பி ஓட முயன்ற வாலிபரை, அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், வாலிபரை மீட்டு விசாரித்ததில், அவர், திருவள்ளூர் மாவட்டம், கே.ஜி.கண்டிகையை சேர்ந்த சுப்பிரமணியன், 23, என, தெரியவந்தது.
ஜனனியை அவர் காதலித்துள்ளார். பாட்டி வீட்டில் இருந்தவரை பார்க்க வந்தபோது, பேச மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.