ADDED : ஜூலை 04, 2025 03:12 AM

திருவள்ளூர்:திருவள்ளூரில் தாயுடன்நடந்து சென்ற குழந்தையை தெருநாய் கடித்தது.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவயாணி. இவர் தன் 2 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய் ஒன்று குழந்தையின் ஆடையை கடித்தபடி இழுத்துச் சென்றது.
குழந்தையின் தாய், நாயை விரட்டி குழந்தையை காப்பாற்றினார். குழந்தையின் இடது காலில் காயம் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார்.