/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆக்கிரமிப்பால் குட்டையான குளம்: போலீசில் புகார்ஆக்கிரமிப்பால் குட்டையான குளம்: போலீசில் புகார்
ஆக்கிரமிப்பால் குட்டையான குளம்: போலீசில் புகார்
ஆக்கிரமிப்பால் குட்டையான குளம்: போலீசில் புகார்
ஆக்கிரமிப்பால் குட்டையான குளம்: போலீசில் புகார்
ADDED : ஜன 07, 2024 01:26 AM
பழவேற்காடு:பழவேற்காடு ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே, 1.5 ஏக்கர் பரப்பில் பொதுக்குளம் இருந்தது. மழைக்காலங்களில் குளத்தில் தேங்கும் தண்ணீரை இப்பகுதி குடியிருப்புவாசிகள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
தற்போது குளம் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி உள்ளது. இந்நிலையில், மாயமான மீதி குளத்தை கண்டுபிடித்து தரும்படி சமூக ஆர்வலர் ஒருவர் திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரில் தெரிவித்துள்ளதாவது:
பழவேற்காடு பகுதியின் நீர் ஆதாரமாக இருந்த, குளம் சுருங்கி, தற்போது, 1.5 ஏக்கரில் இருந்து, 3 சென்ட் ஆகி விட்டது. தற்போது குளம், சிறுகுட்டையாக மாறி உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்காவிட்டால், இப்பகுதியின் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கும். கிராம சபை கூட்டத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குளத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் உள்ளது.