/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'பார்க்கிங்' தகராறில் கடைக்காரர் மீது தாக்குதல் 'பார்க்கிங்' தகராறில் கடைக்காரர் மீது தாக்குதல்
'பார்க்கிங்' தகராறில் கடைக்காரர் மீது தாக்குதல்
'பார்க்கிங்' தகராறில் கடைக்காரர் மீது தாக்குதல்
'பார்க்கிங்' தகராறில் கடைக்காரர் மீது தாக்குதல்
ADDED : ஜூன் 15, 2025 08:33 PM
திருவேற்காடு:திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி, 25; கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி, அவரது கடைக்கு கறி வாங்க வந்த சிலர், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ஜெயகுமார், 58, என்பவரது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமாரின் உறவினர்களான தேசியராஜ், இன்பராஜ், யுவராஜ் உள்ளிட்ட ஐந்து பேர், கடைக்குள் புகுந்து அஷ்ரப் அலியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில், வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்த புகாரின் படி திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.