/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் சின்னஓபுளாபுரம் மக்கள் பாதிப்பு சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் சின்னஓபுளாபுரம் மக்கள் பாதிப்பு
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் சின்னஓபுளாபுரம் மக்கள் பாதிப்பு
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் சின்னஓபுளாபுரம் மக்கள் பாதிப்பு
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் சின்னஓபுளாபுரம் மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 23, 2025 11:14 PM

கும்மிடிப்பூண்டி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ் உள்ள இணைப்பு சாலையோரம், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர், இணைப்பு சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி, நிரம்பி வழிந்து இணைப்பு சாலையில் ஆறாக ஓடுகிறது.
இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களின் சுகாதாரம் கடுமையாக பாதித்து வருகிறது. சுகாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டிய பெரியஓபுளாரம் ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், சின்னஓபுளாபுரம் கிராமத்தில், மக்களின் சுகாதார பாதிப்புக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.