/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நகராட்சியில் ஏழு பணியிடங்கள் காலி வளர்ச்சி பணி நிறைவேறுதில் சுணக்கம் நகராட்சியில் ஏழு பணியிடங்கள் காலி வளர்ச்சி பணி நிறைவேறுதில் சுணக்கம்
நகராட்சியில் ஏழு பணியிடங்கள் காலி வளர்ச்சி பணி நிறைவேறுதில் சுணக்கம்
நகராட்சியில் ஏழு பணியிடங்கள் காலி வளர்ச்சி பணி நிறைவேறுதில் சுணக்கம்
நகராட்சியில் ஏழு பணியிடங்கள் காலி வளர்ச்சி பணி நிறைவேறுதில் சுணக்கம்
ADDED : மே 29, 2025 07:52 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் பிரதான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாததால், திட்டப்பணிகள் நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 82,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சியில் தற்போது, பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு பணி, புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி, சாலை அமைத்தல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நகராட்சியில் முக்கிய பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.
மூன்று மாதமாக காலியாக இருந்த கமிஷனர் பணியிடத்திற்கு நேற்று முன்தினம் புதிய கமிஷனர் பொறுப்பேற்றார்.
மேலும், நகராட்சி பொறியாளர்-1, அலுவலக மேலாளர்-1, நகரமைப்பு அலுவலர்-1 மற்றும் சுகாதார ஆய்வாளர்-4 ஆகிய பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாக உள்ளது.
இதனால், நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க முடியாமலும், துப்பரவு பணிகளை கண்காணிக்க இயலாமலும் அலுவலர்கள் பற்றாக்குறையால், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் நிலவும் அலுவலர்கள் பூர்த்தி செய்யப்படாத நிலையால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, நகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.