ADDED : பிப் 11, 2024 11:15 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பூவலம்பேடு பஜார் வீதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதிரிவேடு போலீசார் நேற்று அந்த கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது விற்பனைக்காக வைத்திருந்த, 66 கிலோ எடை குட்கா பாக்கெட்டுகள் சிக்கின. பறிமுதல் செய்த போலீசார், மளிகை கடை நடத்தி வந்த பூவலம்பேடு சீனிவாசன், 34, என்பவரை கைது செய்தனர்.