/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகைபயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : ஜூன் 26, 2025 02:05 AM
பழவேற்காடு, பழவேற்காடு பகுதியில் நடைபெறும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில், அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் போல் வந்த, 11 பேரை பாதுகாப்பு குழுவினர் சுற்று வளைத்து பிடித்தனர்.
கடந்த 2008ல், மும்பை வழியாக வந்த பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு ஒருமுறை கடலோர மாவட்டங்களில், 'சாகர் கவாச்' தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேற்று பழவேற்காடிலும் நடந்தது. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு காவல்துறை, கப்பற்படை ஆகிய துறைகள் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.
பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளிலும், கலங்கரை விளக்கம், தோணிரவு, எண்ணுார் காமராஜர் மற்றும் அதானி துறைமுக பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை, கடல் வழியாக தீவிரவாதிகள் போல் வேடமணிந்து, படகில் வந்த 11 பேரை, கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த குழுவினர் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு டம்மி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.