ADDED : ஜூன் 26, 2025 09:42 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 35. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை 6:30 மணியளவில், பணி முடிந்து நாகலாபுரம் - திருத்தணி சாலையில் பைக்கில் வந்துக் கொண்டிருந்தார்.
தாழவேடு காலனி அருகே வந்த போது, மூன்று பேர் அசோக்குமாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.