Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அபாய நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

அபாய நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

அபாய நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

அபாய நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

ADDED : ஜூன் 06, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
காவல்சேரி:திருமழிசை அருகே காவல்சேரி ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 80க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, 25 ஆண்டுகளுக்கு முன் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

தற்போது, இந்த குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதே பகுதியில் மற்றொரு இடத்தில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பழைய குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து, துாண்கள் விரிசல் அடைந்து அபாய நிலையில் உள்ளது.

இதனால், பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், இப்பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை விடுவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து, பலமுறை ஒன்றிய நிர்வாகத்திற்கு தெரிவித்தும், தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை என, பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us