Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 50 முறை சூரிய நமஸ்காரம் பள்ளி மாணவர்கள் சாதனை

50 முறை சூரிய நமஸ்காரம் பள்ளி மாணவர்கள் சாதனை

50 முறை சூரிய நமஸ்காரம் பள்ளி மாணவர்கள் சாதனை

50 முறை சூரிய நமஸ்காரம் பள்ளி மாணவர்கள் சாதனை

ADDED : செப் 04, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில், 50 முறை சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்தனர்.

இந்திய யோகாசனா விளையாட்டு சம்மேளனம் சார்பில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில், ஆஸ்கார் உலக சாதனை நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.

டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளி தாளாளர் தமிழரசன் தலைமை வகித்தார்.

இந்திய யோகாசனா விளையாட்டு சம்மேளனத்தின் தேசிய பொது செயலர் டாக்டர் அரவிந்த் லட்சுமிநாராயணன், ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தொழில்நுட்ப இயக்குநர் டாக்டர் லாவண்யா, கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா மைய நிறுவனர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 144 பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில், 50 முறை சூரிய நமஸ்காரம் செய்தனர்.

இவர்களது சாதனை, ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us