ADDED : செப் 22, 2025 10:05 PM
ஊத்துக்கோட்டை:வெங்கல் அடுத்த மாகரல் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக கனிம வளத்துறைக்கு தகவல் கிடைத்தது.
கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் சரத், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுடன் வாகன சோதனை மேற்கொண்டார்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், திருட்டு மணல் இருந்தது தெரிந்தது. லாரியில் இருந்தவர்கள் தப்பியோடினர். லாரியை பறிமுதல் செய்த வெங்கல் போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.