/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம் கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்
கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்
கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்
கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : செப் 04, 2025 02:44 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே கரடு, முரடான பாதையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் முதல் மாதர்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த சாலையில், சூரப்பூண்டி பேருந்து நிறுத்த சந்திப்பில், பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
அந்த பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டது. மாற்றுப் பாதை, கரடு, முரடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரத்தில், வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
மாற்று பாதையை சீரமைத்து, பாதுகாப்பான பயணத்தை நெடுஞ்சாலை துறையினர் உறுதி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.