ADDED : மே 31, 2025 11:16 PM

கூடப்பாக்கம் :வெள்ளவேடு அருகே கூடப்பாக்கம் ஊராட்சி, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இப்பகுதி வழியே தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் நெடுஞ்சாலையோரம் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால், வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்படுவதோடு, விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊராட்சி பகுதியில் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.