/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுகாதார மையம் அருகே நெற்களம் விவசாயிகள் அதிருப்தி சுகாதார மையம் அருகே நெற்களம் விவசாயிகள் அதிருப்தி
சுகாதார மையம் அருகே நெற்களம் விவசாயிகள் அதிருப்தி
சுகாதார மையம் அருகே நெற்களம் விவசாயிகள் அதிருப்தி
சுகாதார மையம் அருகே நெற்களம் விவசாயிகள் அதிருப்தி
ADDED : செப் 14, 2025 03:13 AM

பள்ளிப்பட்டு:துணை சுகாதார மையத்தை ஒட்டி அமைந்துள்ள நெற்களத்தால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம், துணை சுகாதார மையத்தை ஒட்டி நெற்களம் அமைந்துள்ளது.
இந்த நெற்களத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கிராமத்தில் அமைந்துள்ள இந்த நெற்களத்திற்கு, வயல்வெளியில் இருந்து நெற்கதிர்களை சுமந்துவர விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், துணை சுகாதார நிலையம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ளதால், சுகாதார நிலையம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வருவோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
வயல்வெளியை ஒட்டி நெற்களம் அமைக்கப்பட்டிருந்தால், விவசாயிகளும் சிரமமின்றி கதிரடித்து, தானியங்களை மட்டும் வீட்டிற்கு கொண்டுவர வசதியாக இருக்கும்.
மேலும், நெற்களம் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதற்கு மாற்றாக, நிழற்குடையுடன் கூடிய புதிய நெற்களத்தை வயல்வெளி பகுதியில் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.