/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுடுகாடுக்கு பாதை வசதி வருவாய் துறையினர் ஏற்பாடு சுடுகாடுக்கு பாதை வசதி வருவாய் துறையினர் ஏற்பாடு
சுடுகாடுக்கு பாதை வசதி வருவாய் துறையினர் ஏற்பாடு
சுடுகாடுக்கு பாதை வசதி வருவாய் துறையினர் ஏற்பாடு
சுடுகாடுக்கு பாதை வசதி வருவாய் துறையினர் ஏற்பாடு
ADDED : ஜூன் 11, 2025 02:47 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பரேஸ்புரம் கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிவாசிகள் இறந்தவர்களை புதைக்க, எரிக்க கிராமத்தின் வடக்கு பகுதியில் சுடுகாடு உள்ளது. சுடுகாட்டுக்கு சென்று வர பாதை இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளாக தனிநபர் ஒருவரின் விவசாய நிலத்தின் வழியாக சென்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனிநபர் விவசாய நிலத்தை முள்வேலி கொண்டு அடைத்தார். இதனால் பகுதிவாசிகள் செல்ல முடியவில்லை.
இதையடுத்து தங்களுக்கு சுடுகாடுக்கு பாதை அமைக்க வேண்டும் என, தொடர்ந்து ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சுடுகாடு பாதை சம்பந்தமாக கடந்த வாரம் கிராம மக்கள் மற்றும் விவசாய நில உரிமையாளரான முனிரத்தினத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வருவாய் துறையினர் வாயிலாக சமரசம் செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என போலீசார் சமரசம் செய்தனர்.
அதன்படி நேற்று திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் வருவாய் துறையினர் நில அளவீடு செய்து தற்காலிகமாக ஏரி வரவு கால்வாய் அருகே பரேஸ்புரம் சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தினர்.