/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குடியிருப்புகளுக்கு நடுவே டிப்போ விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்குடியிருப்புகளுக்கு நடுவே டிப்போ விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
குடியிருப்புகளுக்கு நடுவே டிப்போ விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
குடியிருப்புகளுக்கு நடுவே டிப்போ விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
குடியிருப்புகளுக்கு நடுவே டிப்போ விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
ADDED : ஜன 29, 2024 06:41 AM
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், வாலாஜாபேட்டை செல்லும் சாலையை ஒட்டி, சோளிங்கர் பேருந்து பணிமனை அமைந்துள்ளது.
மாநில நெடுஞ்சாலையில் இருந்து, 150 மீட்டர் துாரம் தள்ளி குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த பணிமனைக்கு, குறுகிய தெருவின் வழியாக சாலை அமைந்துள்ளது.
கடந்த, ஒன்பது ஆண்டுகளாக இந்த பணிமனைக்கு இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை.
தற்போது தான் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குறுகலான தெருவில், பணிமனைக்கு பேருந்துகள் வந்து செல்வதால், இந்த பகுதியில் வசிப்பவர்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
குழந்தைகளும் வீட்டை விட்டு தெருவில் வந்து விளையாட முடியாத நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த பகுதி வேகமாக வளர்ந்துள்ளது. ஏராளமான குடியிருப்புகள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது. பேருந்து பணிமனைக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.