/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காட்டூர் சாலையோரம் பள்ளம் தடுப்புகள் அமைக்க கோரிக்கை காட்டூர் சாலையோரம் பள்ளம் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
காட்டூர் சாலையோரம் பள்ளம் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
காட்டூர் சாலையோரம் பள்ளம் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
காட்டூர் சாலையோரம் பள்ளம் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 22, 2025 12:01 AM

பொன்னேரி:ரெட்டிப்பாளையம் - காட்டூர் சாலையோர பகுதிகள் தாழ்வாக இருப்பதால், விபத்துகளை தவிர்க்க தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம், அத்திமஞ்சேரி வழியாக காட்டூர் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள், 4 அடி தாழ்வாக உள்ளன.
சாலையும் குறுகலாக இருக்கும் நிலையில், எதிரேதிரே வாகனங்கள் கடக்கும்போது சிரமத்திற்கு ஆளாகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளும் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இங்கு, சாலையோர தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படவில்லை.
பள்ளி வாகனங்கள், டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவை செல்லும்போது, எதிரே வரும் வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சாலையின் இருபுறமும் தடுப்புகள் மற்றும் ஒளிரும் எச்சரிக்கை விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.