/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆத்துார் - பண்டிக்காவனுார் இடையே ஆற்றில் தடுப்பணை அமைக்க கோரிக்கை ஆத்துார் - பண்டிக்காவனுார் இடையே ஆற்றில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
ஆத்துார் - பண்டிக்காவனுார் இடையே ஆற்றில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
ஆத்துார் - பண்டிக்காவனுார் இடையே ஆற்றில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
ஆத்துார் - பண்டிக்காவனுார் இடையே ஆற்றில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2025 02:41 AM

சோழவரம்:ஆத்துார் - பண்டிக்காவனுார் கொசஸ்தலை ஆற்றில், மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் துவங்கும் கொசஸ்தலை ஆறு, வேலுார் மாவட்டம் வழியாக, திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி நீர்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து தாமரைப்பாக்கம், காரனோடை, மீஞ்சூர் வழியாக எண்ணுார் பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இதில், தாமரைப்பாக்கம், சீமாவரம் ஆகிய பகுதிகளில் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. அகரம், குதிரைப்பள்ளம், வன்னிப்பாக்கம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.
கூடுதல் மழைநீரை சேமித்து வைக்கும் வகையில், சோழவரம் அடுத்த ஆத்துார் - பண்டிக்காவனுார் கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தற்போது உள்ள அணைக்கட்டுகள், தடுப்பணைகளில் 2 - 3 டி.எம்.சி., மழைநீர் தேக்கி வைக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், ஆற்றில் கடைசியாக உள்ள சீமாவரம் அணைக்கட்டில் இருந்து உபரிநீராக, 12 - 15 டி.எம்.சி., கடலுக்கு செல்கிறது.
கடலுக்கு செல்லும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாது. இருப்பினும், ஆற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைப்பதன் வாயிலாக, நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். இதனால், ஆற்றின் கரையோரங்களில் உள்ள விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, நீர்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, புதிய தடுப்பணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.