/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/உயர்மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கைஉயர்மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை
உயர்மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை
உயர்மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை
உயர்மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 04, 2024 09:08 PM
பெரியபாளையம்:சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. இங்குள்ள பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு அம்மனை தரிசனம் செய்ய வருவர்.
இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்த கால கட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று, அங்கேயே தங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.
இங்கு அரசு மேனிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய அரசு நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள அரசு மேனிலைப் பள்ளி அருகே உள்ள கடைகளால் இரவு நேரங்களில் வெளிச்சம் ஏற்படுகிறது.
இரவு, 10:00 மணிக்கு மேல் கும்மிருட்டாக மாறி விடுகிறது. இந்த சாலையில் தினமும், 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. எனவே, அரசு பள்ளி அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.