/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மீஞ்சூர் - வண்டலுார் வழித்தடத்தில் மாநகர பஸ் இயக்க கோரிக்கைமீஞ்சூர் - வண்டலுார் வழித்தடத்தில் மாநகர பஸ் இயக்க கோரிக்கை
மீஞ்சூர் - வண்டலுார் வழித்தடத்தில் மாநகர பஸ் இயக்க கோரிக்கை
மீஞ்சூர் - வண்டலுார் வழித்தடத்தில் மாநகர பஸ் இயக்க கோரிக்கை
மீஞ்சூர் - வண்டலுார் வழித்தடத்தில் மாநகர பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜன 05, 2024 08:27 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் - - வண்டலுார் இடையே, 62 கி.மீ., தொலைவிற்கு வெளிவட்ட சாலை அமைக்கபட்டு, கடந்த, 2022ல் பயன்பாட்டிற்கு வந்தது. வெளிவட்ட சாலையானது சீமாவரம், அருமந்தை, சோழவரம், செங்குன்றம், பூந்தமல்லி, பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக வண்டலுார் வரை பயணிக்கிறது.
மீஞ்சூர், அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் மேற்கண்ட பகுதிகளில் பணிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தற்போது பணிக்கு செல்ல மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக பேருந்தில் செங்குன்றம் சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் பயணிக்கும் நிலை உள்ளது.
புறநகர் ரயில்கள் செல்பவர்கள் சென்னை சென்ட்ரல் அல்லது பார்க் டவுன் சென்று அங்கிருந்து மாற்று ரயில்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு பயணிக்க வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீஞ்சூர் - வண்டலுார் இடையேயான வெளிவட்ட சாலை, பல்வேறு பகுதிகளை இணைப்பதால், அந்த வழித்தடத்தில் மாநகர பேருந்துகளை இயக்கிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதன் வாயிலாக மாநகர போக்குவரத்து கழகத்திற்கும் எதிர்பார்த்த வருவாய் கிடைப்பதுடன், பயணியர் நேர விரயமும் தவிர்க்கப்படும் என அவர்கள் தெரித்துள்ளனர்.