/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு சீரமைப்புபி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு சீரமைப்பு
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு சீரமைப்பு
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு சீரமைப்பு
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு சீரமைப்பு
ADDED : ஜன 27, 2024 11:16 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் உயர்மின் விளக்கு கட்டடத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விளக்கு கடந்த, மூன்று மாதங்களாக இரவில் எரிவதில்லை.
இதனால் குடிமகன்கள் இரவில் பி.டி.ஓ., அலுவலக வாயிலில் அமர்ந்தும், அலுவலகத்தின் பின்புறம் சென்றும் மது அருந்தி செல்கின்றனர்.
பி.டி.ஓ., அலுவலகத்தை குடி மையமாக மாற்றி வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பழுதடைந்து எரியாமல் உள்ள உயர்மின் விளக்கை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவன் எரியாத மின் விளக்கை சீரமைக்க உத்தரவிட்ட நிலையில், பழுது நீக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது.