/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு 31ம் தேதி அகற்ற முடிவுரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு 31ம் தேதி அகற்ற முடிவு
ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு 31ம் தேதி அகற்ற முடிவு
ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு 31ம் தேதி அகற்ற முடிவு
ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு 31ம் தேதி அகற்ற முடிவு
ADDED : ஜன 27, 2024 11:34 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை, 25 கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான்கு பார்க்கிங் வளாகங்கள், சிப்காட் மற்றும் பஜார் பகுதியில் இரு பிரமாண்ட நுழைவாயில் கட்டடங்கள், எஸ்கலேட்டர்கள், வணிக வளாகம், கணினி முன்பதிவு மையம், ரயில் பயணியர் ஓய்வு அறை என, ஏராளமான வசதிகளுடன் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்து வீடு, கடை, தேவாலயம், கோவில்கள் நிறுவி உள்ளனர். ரயில் நிலையத்தின் இருபுறத்திலும் சேர்த்து, 2.26 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என அளவிடப்பட்டுள்ளது.
அதை தாமாக முன்வந்து அகற்றி கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 31ம் தேதி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.