Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆயில் சுத்திகரிப்பு நிலையங்களில் 'புட்செல்' போலீசார் திடீர் சோதனை

ஆயில் சுத்திகரிப்பு நிலையங்களில் 'புட்செல்' போலீசார் திடீர் சோதனை

ஆயில் சுத்திகரிப்பு நிலையங்களில் 'புட்செல்' போலீசார் திடீர் சோதனை

ஆயில் சுத்திகரிப்பு நிலையங்களில் 'புட்செல்' போலீசார் திடீர் சோதனை

ADDED : ஜன 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், செங்குன்றம் மற்றும் திருவள்ளூர் அடுத்த எடப்பாளையம் ஆகிய இடங்களில், ஆயில் சுத்திகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, பயன்படுத்தப்பட்ட ஆயில் சேகரிக்கப்பட்டு, அதை மறுசுழற்சி செய்து, பின், தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட 'புட்செல்' போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

எஸ்.பி., ராமகிருஷ்ணன் தலைமையிலான குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை குமார், சுப்ரமணி ஆகியோர் கொண்ட குழுவினர், ஆயில் சுத்திகரிப்பு நிலையங்களில் சோதனையிட்டனர்.

அப்போது, நிறுவனம் இயங்குவதற்கான உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

பின், ஆயில் சுத்திகரிப்பு பணியில் முறைகேடு நடக்கிறதா என்பதை கண்காணித்து, விதிமுறைகளுக்கு மாறாக, எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us