Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பெட்ரோலுக்கு பணம் கேட்ட 'பங்க்' ஊழியருக்கு அடி, உதை

பெட்ரோலுக்கு பணம் கேட்ட 'பங்க்' ஊழியருக்கு அடி, உதை

பெட்ரோலுக்கு பணம் கேட்ட 'பங்க்' ஊழியருக்கு அடி, உதை

பெட்ரோலுக்கு பணம் கேட்ட 'பங்க்' ஊழியருக்கு அடி, உதை

ADDED : பிப் 10, 2024 08:44 PM


Google News
திருவள்ளூர்:திருப்பாச்சூரில் பெட்ரோல் போடுவதற்கு, பணம் கேட்ட ஊழியர் தாக்கப்பட்டார்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் - கடம்பத்துார் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கிற்கு, நேற்று முன்தினம், திருப்பாச்சூரைச் சேர்ந்த, மதன்குமார், 20, என்பவர் வந்து, தன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுமாறும், பணம் பின்னர் தருவதாகவும் கூறினார்.

ஆனால், ஊழியர் சீனிவாசன் அதற்கு மறுத்து, ஏற்கனவே போட்ட பெட்ரோலுக்கே பணம் தரவில்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், சீனிவாசனை மிரட்டி, பெட்ரோல் பங்கில் இருந்த டேபிள், புத்தகம் மற்றும், பே.டி.எம்., கருவியையும் உடைத்துள்ளார்.

தட்டிக்கேட்ட சீனிவாசனை அடித்து, உதைத்தும், பங்க் உரிமையாளர் நாராயணராவையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து, நாராயணராவ் கொடுத்த புகாரின் பேரில், திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us