ADDED : ஜன 03, 2024 08:45 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் ௧ மாணவ - மாணவியருக்கு தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது.
நடப்பு 2023 - 2024ம் கல்வியாண்டில், மாவட்டத்தில் உள்ள 100 அரசு பள்ளி மற்றும் 15 அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் ௧ பயிலும், 17,391 மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதன் துவக்க விழா, நேற்று டி.ஆர்.பி.சி.சி.சி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, முதற்கட்டமாக 336 பேருக்கு சைக்கிள் வழங்கினார்.
இதில், திருவள்ளூர் காங்., - எம்.பி., ஜெயகுமார், எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், ராஜேந்திரன், திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.