இருளர்களுக்கு உணவு பொருள் வழங்கல்
இருளர்களுக்கு உணவு பொருள் வழங்கல்
இருளர்களுக்கு உணவு பொருள் வழங்கல்
ADDED : ஜூன் 16, 2025 02:07 AM

திருவாலங்காடு,
ஜூன் 16-
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்ராயகுண்டா கிராமம். இங்கு, 40 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்கள், அடிப்படை வசதி மட்டுமின்றி, உணவுக்கும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, நேற்று திரு ஆலங்காட்டப்பர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் அறக்கட்டளை சார்பில், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 40 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.