/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்கு
ADDED : ஜன 12, 2024 09:46 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் இந்து மக்கள் கட்சியினர் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைர் மூர்த்தி தலைமையில் ஆறு பேர், வெள்ள நிவாரணங்களை அனைத்து மக்களுக்கும் தராத தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். எவ்வித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக ஒன்று கூடி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் கொடுத்த புகார்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.