/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை செய்தவருக்கு காப்பு போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை செய்தவருக்கு காப்பு
போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை செய்தவருக்கு காப்பு
போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை செய்தவருக்கு காப்பு
போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை செய்தவருக்கு காப்பு
ADDED : ஜூலை 04, 2025 02:38 AM
திருவள்ளூர்:திருவள்ளூரில் போலி பத்திரம் மூலம் 51 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி விற்பனை செய்த வழக்கில் திருப்போரூர் வாலிபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த சிறுவானுார் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 45. இவருக்கு ஊத்துக்கோட்டை சாலையில் வேடங்கிநல்லுார் பகுதியில் 51 சென்ட் நிலம் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பத்திர பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்று எடுத்து பார்த்த போது அது வேறொருவர் பெயரில் இருந்தது தெரிய வந்தது.
போலி பத்திரம் மூலம் நிலத்தை திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 32, என்பவர் கடந்த 2023ம் ஆண்டு தனது பெயருக்கு மாற்றி 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ரமேஷ்பாபு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவியாளர் சிவசங்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.