/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு' சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'
சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'
சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'
சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'
ADDED : செப் 17, 2025 02:12 AM

திருத்தணி:மகள் வீட்டில் வேலை பார்த்த, 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 60. இவருடைய மகள் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் வசித்து வருகிறார்.
மூன்று தினங்களுக்கு முன் பெருமாள், வெள்ளாத்துாரில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். அங்கு வேலை செய்யும், 14 வயது சிறுமியிடம், பெருமாள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கைது செய்தனர்.